Home இலங்கை செய்திகள் யாழில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்..!{படங்கள்}

யாழில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்..!{படங்கள்}

13

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரம் ஒன்று இன்று காலை 22.02.2024 கரையொதுங்கியுள்ளது.

மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதனை அவதானித்து உடனடியாக வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு அறிவித்தனர்.

எனினும் இரும்பால் ஆன குறித்த மிதக்கும் கூடாரத்தை கட்டைக்காடு மீனவர்கள் தங்களது முயற்சியால் கரைக்கு கொண்டுவந்தனர்.

கரைக்கு அப்புறப்படுத்தும் மீனவர்களின் முயற்சி தோல்வியுற்றதால் கூடாரத்தை அகற்றும் முயற்சியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் ஈடுபட்டு அதனை அப்புறப்படுத்தினர்.

அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய இவ்வாறான கூடாரங்களில் தாய்லாந்து கொடி காணப்பட்டதோடு  கரையொதுங்கிய இந்த கூடாரத்தில் எந்தவிதமான கொடியும் , காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

IMG 20240222 070551 IMG 20240222 064853 IMG 20240222 065515 IMG 20240222 064654

Previous article14 ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை..!
Next articleகெருடாவில் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு சேவை நலன் பாராட்டு விழா..{படங்கள்}