Home Local news மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்து சில நிமிடங்களில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞன் பலி!

மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்து சில நிமிடங்களில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞன் பலி!

22

அலவத்துகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்கும்பர- அலவத்துகொட வீதியில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் ஒருவர், மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக தொழில் செய்து வந்த கண்டி- மாவில்மட பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் வியாழக்கிழமை(23) இரவு 7.30 மணியளவில் அங்கும்பர வீதியில் தனது மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்ததை வீதியில் சென்ற ஒருவர் கண்ட சில நிமிடங்களில், இவர் எரிகாயங்களுடன் மீட்கப்பட்டதாக அலவத்துகொட பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞர் தனது மோட்டார் சைக்கிளிலுள்ள எரிபொருளைப் பயன்படுத்தி தனக்கு தானே தீமூட்டியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்

Previous articleயாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து மோதி குடும்பஸ்த்தர் பலி!
Next articleஇன்றைய ராசிபலன் – 27/02/2023, மீன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்…