Home Local news மாணவனை பாடசாலையில் சேர்ப்பதற்கு 3 லட்சம் இலஞ்சம் கேட்ட ஆசிரியர்! இலஞ்ச, ஊழல் தடுப்பு பிரிவின்...

மாணவனை பாடசாலையில் சேர்ப்பதற்கு 3 லட்சம் இலஞ்சம் கேட்ட ஆசிரியர்! இலஞ்ச, ஊழல் தடுப்பு பிரிவின் பொறியில் சிக்கினார்

22

பாடசாலையில் மாணவனை சேர்ப்பதற்காக 3 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலையின் உயர்தர கலைப் பிரிவுக்கு பொறுப்பான தலைமை ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு மாணவனை உயர்தர கலைப் பிரிவில் சேர்ப்பதற்காக, குறித்த ஆசிரியர், மாணவியின் தந்தையிடம் மூன்று இலட்சம் ரூபா கோரியுள்ளார்.

இது தொடர்பாக மாணவனின் தந்தை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததையடுத்து, குருணாகல் நகருக்கு இலஞ்சப் பணத்தை ஆசிரியரிடம் கொடுப்பதற்காக வருமாறு கூறியுள்ளனர்.

இதனடிப்படையில் பணம் கொடுக்க முற்பட்டபோது சந்தேகத்திற்குரிய ஆசிரியர் இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் குருணாகல் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Previous articleபெண்கள் இருவரின் சடலங்கள் மீட்பு
Next articleG.C.E. Advance Level Exam 2022 Biology Past Papers free download