Home Local news கிட்னி மோசடி: மேலும் ஒரு தரகர் கைது

கிட்னி மோசடி: மேலும் ஒரு தரகர் கைது

21

பொரளை தனியார் வைத்தியசாலையொன்றில் சிறுநீரகங்களைப் பெற்றுக் கொள்வதாக ஏழ்மை நிலையில் உள்ள மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த (32) வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலும் நேற்றிரவு (9) டுபாய் செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் வைத்தியசாலையில் பணிபுரிபவர் போன்று வேடமணிந்து இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Previous articleபெண்களுடன் அலைபேசியில் ஆபாசம்; ஒருவர் கைது
Next articleஇரத்தினபுரியில் பஸ் பாய்ந்ததால் பதற்றம்