Home gossips கான்ஸ்டபிளின் மனைவியிடம் மையல் கொண்ட ஓஐசி கைது!

கான்ஸ்டபிளின் மனைவியிடம் மையல் கொண்ட ஓஐசி கைது!

20

பொலிஸ் விசேட அதிரடிப்படையில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மனைவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முற்பட்டதாக கூறப்படும் வெல்லவ பொலிஸ் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி கடந்த 5 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கான்ஸ்டபிளின் மனைவி, OICக்கு எதிராக குருநாகல் SSP A.M.U.சந்தனவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

அவரது முறைப்பாடு தொடர்பில் குருநாகல் பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் முழுமையான விசாரணைகளை நடத்தியது. சந்தேக நபர் பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பொலிஸ் பரிசோதகர் குருநாகல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர் 7,500 ரூபா பிணையில் மற்றும் தலா 100,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.

சந்தேகத்திற்குரிய பொலிஸ் அதிகாரியும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Previous articleஇன்றைய ராசிபலன் – 07/02/2023, கும்ப ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..
Next articleயாழில் போலி ஆவணம் தயாரித்து வங்கிக்கடன் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது!