Home Uncategorized அமெரிக்கா தொழிற்சாலை குப்பைக் கிடங்கில் தீ விபத்து!

அமெரிக்கா தொழிற்சாலை குப்பைக் கிடங்கில் தீ விபத்து!

6

அமெரிக்கா தொழிற்சாலை குப்பைக் கிடங்கில் தீ விபத்து!

அமெரிக்கா தொழிற்சாலை குப்பைக் கிடங்கில் தீ விபத்து! - todayjaffna News - 24x7 todayjaffna Breaking News

 அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் டெட்ராய்டு நகரில் ஒரு தொழிற்சாலையில் நேற்று திடீரென தீப்பிடித்தது.

இந்த தீ சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வேகமாக பரவியது. இதன் காரணமாக தொழிற்சாலையின் குப்பை கிடங்கில் தீப்பற்றி ஆங்காங்கே வெடித்து சிதறின.

இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன. 

எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என போலிஸார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே அங்கு கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்த தீயை அணைக்கும் பணியில் ஏராளமான ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.  

Previous articleதமிழ் மொழியின் சிறப்புகள் கட்டுரை
Next articleகோவிட் தடுப்பூசியை 217 முறை பெற்றுக் கொண்ட ஜேர்மன் நாட்டவர்